Monday, 5 December 2011

விண்டோஸ் 7 இயங்குதளத்துடன் புதிய சோனி எரிக்ஸன்

நிறைய ஸ்மார்ட்போன்கள் குவிந்து கொண்டிருக்கையில், தனக்கென்று தனி முத்திரை பதிக்கும் சோனி நிறுவனம், ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை தன் பக்கம் திருப்ப எக்ஸ்பீரியா எக்ஸ்-7 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.


இந்த ஸ்மார்ட்போனில் 4.3 இஞ்ச் திரை டபிள்யூவிஜிஏ டச் ஸ்கிரீன் தொழில் நுட்ப வசதி கொண்டது. எக்ஸ்பீரியா எக்ஸ்-7 மொபைல் விண்டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கும். இந்த ஓஎஸ் தொழில் நுட்பத்தை எளிதாக இயங்க வைக்க 1.2 ஜிகாஹெர்டஸ் வேகம் கொண்ட ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்8260 சிபியு பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளதால், 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெற முடியும்.

3ஜி , எட்ஜ் குவாட் பேண்டு, ஜிபிஆர்எஸ் போன்ற தொழில் நுட்பங்களையும் கொண்டுள்ளது. எக்ஸ்பீரியா எக்ஸ்-7 ஸ்மார்ட்போனில் சோஷியல் நெட்வொர்க் வசதியை பெறலாம். ஸ்டீரியோ புளூடூத் வி2.1 வசதியினை உபயோகித்து தகவல்கள் பரிமாற்றம் செய்யலாம்.

இதன் எல்ஐ-அயான் பேட்டரி, பேசுவதற்கு அதிக நேர டாக் டைமை வழங்குகிறது. இந்த புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்-7 ஸ்மார்ட்மொபைல் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவர்ந்து இழுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Saturday, 3 December 2011

புதிய 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் எல்ஜி!


அசர வளர்ச்சி கண்டு வரும் மொபைல் உலகில் புதிய தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இதனால் புதிய புதிய தொழில் நுட்பங்களை கொடுப்பதில் ஒவ்வொரு நிறுவனமும் தனது தனி தன்மையை காட்டி வருகிறது.


எல்ஜி நிறுவனமும் அப்படி தனது தனி தன்மையை நிரூபித்து ஒரு தனி முத்திரையை ஏற்படுத்தி உள்ளது. எக்லிப்ஸ் என்ற புதிய 4ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது எல்ஜி நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டுள்ளது. இதனால் உயர்ந்த தொழில் நுட்பத்தினை பெறுவதும் எளிதான காரியம்.

இதன் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் எம்எஸ்எம்8255 1ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸர் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் கியூவர்டி கீப்பேட் வசதியினையும் பெற்றுள்ளது.

இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்தாலும் சுலபமாக இயங்கும். எல்ஜி எக்லிப்ஸ் 4-ஜி மொபைல் 3.5 இஞ்ச் பெரிய மல்டி திரை வசதியை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது. 3.1 மெகா பிக்ஸலில் ஒரு கேமராவும், 0.3 மெகா பிக்ஸலில் செகன்டரி கேமராவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி பற்றியும் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 1,500 எம்ஏஎச் ரிமூவபுல் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5.5 மணி நேரம் டாக் டைம் வசதியினையும், 14 நட்கள் ஸ்டான்-பை டைமினையும் பெற முடியும்.

இந்த ல்மார்ட்போன் 3ஜி வசதிக்கும் சப்போர்ட் செய்யும் திறன் கொண்டது. மெமரி வசதி மிகவும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிகிறது. இதில் 1ஜிபி வரை இன்டர்னல் வசதியினையும், 32ஜிபி வரை மெமரியை விரிவுபடுத்தி கொள்ளும் வசதியினையும் பெறலாம்.

மைக்ரோ யூஎஸ்பி வி2.0 பயன்படுத்தப்பட்டுள்ளதால், தகவல்களை எளிதாக பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். இந்த புதிய மொபைலான எல்ஜி எக்லிப்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன் சிறந்த தொழில் நுட்பத்தையும் வழங்கும்.

Wednesday, 14 September 2011

48 மணி நேரத்தில் google adsense நீங்களும் எளிதில் பெறுங்கள்...

google adsense பல தமிழ் வலைப்பதிவர்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.. ஆனால் google affiliate தளங்கள் மூலம் நாம் 48 மணி நேரத்தில் எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.. 

அதற்குத்தேவை

1) புதிய gmail id அல்லது இதற்கு முன்னர் adsense க்கு apply செய்யாத மின்னஞ்சல்..
2)  உங்களால் சுயமாக எழுதப்பட்ட 10 ஆங்கில பதிவுகள் மட்டும்

இவைகள் இருந்தால் எனது வலையகத்திற்கு google adsense ஐ நான் 48 மணி நேரத்தில் பெற்றதைப்போல் எளிதில் பெறலாம்


Friday, 26 August 2011

தமிழர் மூவர் தூக்குத்தண்டனையை இரத்து செய்யக்கோரி பெண் வழக்கறிஞர்கள் மூவர் உண்ணாநிலைப்போராட்டம்

மேனாள் இந்தியப்பிரதமர் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி பெண்கள் மைய வழக்கறிஞர் கயல், வடிவாம்பாள் மற்றும் சுஜாதா ஆகியோர் உண்ணாநிலைப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


Thursday, 18 August 2011

அன்னா ஹசாரேவும் விஜயகாந்த்தும் சந்தித்தால்...

அன்னா ஹசாரேவும் விஜயகாந்த்தும் சந்தித்தால் என்ன நடக்கும்....?

கடந்த ஐந்தாண்டுகளாக மேடைகளில் " தான் ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஊழலை ஒழிப்பேன்" என்று கூறி வந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை சமீபகாலமாக ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லிவரும் அன்னா ஹசாரேவும் சந்தித்தால் என்ன நடக்கும்....

நடிகர் விஜயகாந்த் கண்டிப்பாக தனது "ரமணா" பட டிவிடியை கொடுத்துப்பார்க்கச்சொல்வார்...

வேறு என்ன சொல்வார் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை... இதை படிக்கும் உங்களுக்கு தெரிந்தால் கருத்திடுங்கள்...


[ 600+ மதிப்பெண்ணை 12 ஆம் வகுப்பு தேர்வில் பெற்று சென்னையிலுள்ள முதன்மை கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை விஸ்காம் படிப்பில் விஜயகாந்தின் மூத்த மகன் சேர்ந்துள்ளதாக கேள்விப்பட்டேன்... அக்கல்லூரியில் விஸ்காமில் சேர தகுதியற்ற மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் எம்.எல்.ஏ யின் மகனுக்கு சீட் கிடைத்தது எப்படி...? இது எம்.எ.ஏ என்ற பதவியின் லஞ்சத்தால் கிடைத்த சீட்டா? ]

Wednesday, 17 August 2011

கோவை ஆன்லைன் தோழர்களே இன்று மதியம் 2 மணி நேரம் கணிணிக்கு விடுமுறை விடுங்கள்

மூவர் உயிர் காக்க கோவையில் முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம்

நம் தமிழர் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிர்காக்க கோவை தந்தி அலுவலகத்தில் மதியம் 2 மணியளவில் தமிழக முதல்வருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடைபெறவுள்ளது.

தந்தி படிவம் காந்திபுரம் விரைவு பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் படிப்பகத்தில் கிடைக்கும்..,

கோவையில் ஆன்லைனில் ஈழ ஆதரவு எழுதும் தோழர்கள் இன்றும் மதியம் தந்தி அலுவலகத்தில் திரண்டு உங்களின் ஆக்கப்பூர்வமான ஆதரவினை காட்டுங்கள்...




கிறிசுடியன் பிரதர்ஸ் - திரை விமர்சனம்

சரத்குமார், மோகன்லால், சுரேஷ் கோபி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள
கிறிசுடியன் பிரதர்ஸ் மலையாள மொழித்திரைப்படம்



முன்னணி நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடிப்பது என்பது தமிழ்த்திரைப்படங்களில் தற்போது பெரிதளவு வருவதில்லை...

ஆனால் மலையாளத்திரைப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலர் இணைந்து யதார்த்தமாக நடிப்பது வழமையாக உள்ளது..

இத்திரைப்படத்தில்

1) மோகன் லால்
2) திலீப்
3) சுரேஷ் கோபி
4) சரத் குமார்
5) பிஜி மேனன்
6) லக்‌ஷ்மி ராய்
7) காவ்யா மாதவன்
8) கனிகா

இத்தனை நட்சத்திர பட்டாளங்களையும் வைத்துக்கொண்டு அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்குநர் ஜோசி இயக்கியுள்ளார்...

கிறித்துவ பணியாளராக பயிற்சி பெற செல்லும் திலீபனின் நகைச்சுவையும் இவருக்கு ஜோடியாக காவ்யா மாதவன்

வங்கி மேலாளரான மோகன்லால் சதியால் கொலைக்குற்றவாளியாகி டானாக மாறி அதிரடியில் கலக்கியுள்ளார்.. இவரது காதலியாக ஒரே ஒரு பாடலில் மட்டும் வரும் லக்‌ஷ்மி ராய்




பெண்களை பாலியல் தொழிலுக்குத்தள்ளுபவர்களை அழிக்கும் மும்பை டானாக சரத்குமாரும் அதிரடியில் கலக்கியுள்ளார்..

கொலைகளை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரியாக மோகன் லால் இவருக்கு ஜோடியாக  கனிகா...

வில்லனாக பிஜி மேனன் மற்றும் பலர்...

மலையாள திரைப்படத்தின் தன்மைக்கேற்றாற்போல் நகைச்சுவைகளும், யதார்த்தமான நடிப்பும், காதலும், அதிரடியும் உள்ளது...

மொத்தத்தில் ஆக்சன் திரைப்பட ரசிகர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்கும்...







வலைப்பூவில் நான்...

எனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள இவ் வலையகம் மூலம் உங்களிடம் வலைஞன்....