Tuesday, 8 May 2012

என் பெயர் லார்கோ! - முத்துகாமிக்ஸ்

இன்று முத்து காமிக்ஸ் SURPRISE ஸ்பெஷல் !! கூரியரில் கிடைத்தது. எதிர்பாராத இதழ்தான் இவ் இதழ். 2 கதைகள் 98 பக்கத்தில் முழுவண்ணத்தில். பார்க்க மிகவும் களிப்பினை தந்தது. நவீன காலத்திற்கேற்ப மிகவும் தரமான தாளில் முழுவணத்தில் தொடர்ந்து வெளிவருவது மிகவும் பாராட்டுக்குரிய முயற்சிதான்.

இதழில் லார்கோ வின்ச் என்ற புதிய கதை நாயகனை அறிமுகம் செய்திருந்தார்கள். பல பில்லியன் சொத்துக்களுக்கு தத்து வாரிசான உலகம் சுற்றும் நாயகன் தான் லார்கோ வின்ச், அவனை சூழ்ந்திருக்கும் சூழ்ச்சிகளை ஒழித்து நன்பண் சைமனுடன் வெற்றி நடைபோடுகிறான் நாயகர் லார்கோ. மிகவும் அருமையான இக்கதையினை தமிழில் நமக்களித்த ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு "ஓ" போடுங்கள்..


இந்த இதழில் லார்கோ வின்ச்சின் இரண்டு பாகங்கள் வந்துள்ளன. மேலும் 1985 இல் வெளிவந்த திகில் காமிக்ஸினை மறுபதிப்பு செய்துள்ளனர். பிசாசுக்குளம் கதையை தவிர்த்து மற்றவை அந்த அளவு திகிலை கிளப்பவில்லை. ஏனெனில் மற்ற கதைகள் அறிவியல்துறை சார்ந்த கதைகளே....